Sunday, January 6, 2008

சொல்லின் செல்வனான ஸ்ரீ ஆஞ்ஜநேயர் ஸ்ரீ ராமபிரானின் திருவடியைத் தொழுது இவ்வண்ணம் கூறுகிறான்


"ஹே ராம! உன்னுடைய மனைவி என்கிற நிலையிலும், உன்னுடைய திருத்தந்தையாரான தசரதனின் மருமகள் என்கிற நிலையிலும், ஜனகனின் புதல்வி என்கிற நிலையிலும் இப்படி மூன்று நிலைகளிலேயும் உயர்ந்து விளங்குகிறாள்" என்று மாற்றானுடைய மனையில் இருக்கும் ஸ்ரீ சீதாபிராட்டிக்கு நற்சாட்சிப் பத்திரம் வழங்குகிறான் ஆஞ்ஜநேயன்.

துல்ய சீல வயோவ்ருத்தாம்
துல்யாபி ஜனலக்ஷணாம்
ராகவோர்ஹதி வைதேஹீம்
தம் சேய மஸிதே க்ஷணா
(வால்மீகி ராமாயணம் 5.16.5)
என்று ஸ்ரீ வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டது. ஸ்ரீ ராமபிரானுக்குச் சரிநிகர் சமானமான குணம், இளமை, நடத்தை எல்லாம் நிரம்பியவளாகச் சீதையை ஆஞ்ஜநேயன் கண்டான்.

பங்குனி உத்திரத் திருநாளன்று ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருந்தபோது ஸ்ரீரங்க தம்பதிகளை ஒரே ஆஸனத்தில் (சரிநிகர் சமமாக & சேர்த்தியறை என்று பெயர்) ?00;வித்தார். ஆஞ்ஜநேயன் வெளியிட்ட கருத்தையே "பகவத் நாராயணாபி மதானுரூப' (ஸ்ரீ ஸரணாகதிகத்யம்) என்று ஆரம்பித்து ஸ்தோத்ரம் செய்கிறார்.ஸ்ரீமத் நாராயணன் ராமனாகவும், ஸ்ரீ மஹாலக்ஷ்மீ சீதையாகவும் அவதரித்து மனித தர்மத்தை உலகிற்குக் காட்டினார்கள்.

No comments: