Thursday, June 18, 2009

அருள்மிகு காமாக்ஷியம்மன் திருக்கோயில் - காஞ்சிபுரம்


அருள்மிகு காமாக்ஷியம்மன் மூலவர் , காஞ்சிபுரம்

தல வரலாறு

ஒரு சமயம் பண்டாசுரன் என்ற ஒரு அரக்கன் தேவர்களை மிகவும் கொடுமை படுட்டினானாம் . தேவர்கள் அம்மனை பூஜித்தார்கள் , அம்மனும் குழந்தை ரூபத்தில் வந்தார் . அவர் பண்டாசுரனிடம் சென்று அவனை ஒரு கொடூர யுத்தத்துக்குப் பிறகு சம்மரித்தார் .

சம்மரித்தடற்குப் பிறகு அன்னை ஒரு இடத்தில் போய் கதவை சாத்திக்கொண்டார் . காலை கதவை திறந்து பார்தால் , உள்ளே பாலா திரிபுரசுந்தரி காமாக்ஷியின் சிலை இருந்தது ! அதாவது , பாலா திரிபுரசுந்தரியே காமாக்ஷி , அவர் தான் குழந்தையின் ரூபத்தில் சென்று பண்டாசுரனை வதம் செய்தார் .

'பாலா' என்றால் பெண் குழந்தை . பாலாவிற்கு இன்னொரு பெயர் கூட உண்டு , அதே 'சோடசி' . சந்ச்க்ரிததில் 'சோடச:' என்றால் பதினாறு , அதனாலே 'சோடசி' என்றால் பதினாறு வயசு ஆன பெண் .

மற்ற முக்கிய சந்நதிகள்

இந்த கோயிலில் பல சந்நதிகள் உண்டு , அவைகள் தான் -



அருள்மிகு பங்காரு காமாக்ஷியம்மன் சந்நதி

பங்காரு காமாக்ஷி - இந்த அம்மன் அதிசுந்தரம் . சுந்தரமான காமாக்ஷியை
'பங்காரு காமாக்ஷி' என்று அழைப்பார் .



அருள்மிகு இராஜசியாமளா சரஸ்வதி சந்நதி

இராஜசியாமளா சரஸ்வதி - இந்த கலைமகளை வழிப்படுவர் சகல கல்விகளையும் பெருவராம் , சிறுவர் வழிப்பட்டால் மிகவும் நன்றாக படிப்பாராம் .



அருள்மிகு சுந்தர லக்ஷ்மி சந்நதி

சுந்தர லக்ஷ்மி - இந்த செல்வமகளை வழிப்படுவர் சகல செல்வங்களையும் பெருவராம் . இவர் அழகான லக்ஷ்மி ,சுந்தரமான லக்ஷ்மி .




அருள்மிகு வாராஹியம்மன் சந்நதி

வாராஹி - இவர் உக்ரமான தேவதை , காற்றுப் பன்றியின் முகம் கொண்டவர் . இவரும் பிரத்யங்கிரா தேவியும் பல சமயம் சேர்ந்து கோயிலில் இருப்பார் , அனால் இந்த ஆலயத்தில் பிரதியங்கிராவுக்கு சந்நதி இல்லை . சும்ப - நிசும்ப அசுரர்களும் அவரோடு சேர்ந்து இருக்கும் அசுரர்களையும் அம்பிகை சம்மரிக்கும் சமயம் , 'அஷ்ட மாத்ரிகைகள்' என்ற எட்டு சக்திகள் உதவி செய்தார் . அவர்கள் பிராம்மணி , வைஷ்ணவி , மகேஸ்வரி , கௌமாரி , இந்திராணி , மாகாளி , வாராஹி , ப்ரத்யங்கிரா . அதாவது , வாராஹி ஒரு அஷ்ட மாத்ரிகை .



அருள்மிகு அரூப லக்ஷ்மி சந்நதி

அரூப லக்ஷ்மி (அலக்ஷ்மி) - அரூப லக்ஷ்மி , அலக்ஷ்மி என்ற பெயர்கள் கொண்டவர் மகாலக்ஷ்மி (சுந்தர லக்ஷ்மி) உடைய அக்கா . மகாலக்ஷ்மி ஞாம் செல்லும் இடங்களில் செல்வர் , அரூப லக்ஷ்மி அநியாயத்தின் இடங்களில் செல்வர் . மகாலக்ஷ்மி மிகவும் அழகு , அரூப லக்ஷ்மி மிகவும் பார்க்க பயங்கரம் .




அருள்மிகு அன்னபூரணி அம்மன் சந்நதி

அன்னபூரணி - அன்னம் இட்ட அன்னை , அன்னபூரணிக்கு மிகவும் தாயை உண்டு . அவர் அருளால்தான் நமக்கு சாப்பாட்டே கிடைக்கும் . எப்பொழுதும் சாப்பாட்டுக்கு முன் அன்னபூரணியின் மந்திரத்தை சொல்லி அவர் மேல் பிரார்த்தனை செய்ய வேண்டும் .

இடத்தின் அமைப்பு

இந்த ஆலயம் காஞ்சிபுர மாநகரில் , ஏகாம்பரேஸ்வரர் கோயில் , குமரகோட்டம் சுப்ரமண்யர் கோயில் அருகில் உள்ளது .

No comments: