Thursday, June 18, 2009

அருள்மிகு வக்ரகாளியம்மன் திருக்கோயில் திருவக்கரை


அருள்மிகு வக்ரகாளியம்மன் மூலவர்

தல வரலாறு

ஒரு சமயம் , வக்ராசுரன் என்று ஒரு அரக்கன் சிவனை தன் தொண்டையில் வைத்து பூஜித்தான் . அவன் கடும் தவமால் சந்தோஷம் ஆகிய சிவன் அங்கு தோன்றினார் . அவன் தன்னை சக்திசாலி ஆக்கும்படி ஒரு வரம் கேட்டான் . சிவன் அந்த வரத்தை கொடுத்தார் . அவன் திமிருடன் எல்லா ரிஷி - முனி தேவர்களையும் கொடுமைப் படுத்தினான் .

சிவபெருமான் நாராயணரிடம் சென்று கூறினார் ,"மஹாவிஷ்ணு , நீங்கள் வக்ராசுரனை வதம் செய்ய வேண்டும் ." மஹாவிஷ்ணு ஒத்துக்கொண்டு வக்ராசுரனை வதம் செய்தார் . அவர் பெயர் வரதராஜப் பெருமாள் ஆனது .

வக்ராசுரனுக்கு துன்முகி என்று அழைக்கப்படும் ஒரு கொடுராமான அரக்கித் தங்கை இருந்தாள் . அவளை வதம் செய்ய சிவப்பெருமான் பார்வதியை கூறினார் . அப்பொழுது அன்னை காளி ஸ்வரூபத்தில் துன்முகியிடம் சென்றார் . ஆனால் , அந்த நேரம் துன்முகி கர்ப்பிணியாக இருந்தாள் . அந்த காலத்தில் கர்ப்பிணி பெண்ணையோ , கருவின் சிசுவையோ கொள்ளக் கூடாது . அதனால் காளியம்மன் வக்கரமாக குனிந்து , துன்முகியின் வயற்றை கிழித்து அவள் குழந்தையை தன் காத்துத் தோடில் மாட்டிக்கொண்டு , துன்முகியாயை வதம் செய்தார் . அதனால் தான் இவருக்குப் பெயர் வக்ரகாளியம்மன் .

இந்த ஆலயத்தின் சிவன் , சந்திரமௌலீஸ்வரருக்கு மூன்று முகங்கள் உண்டு . அவர் சன்னதி பின்னேயே மஹாவிஷ்ணு வரதராஜப் பெருமாள் சன்னதி உள்ளது .
அவர் சங்கு கையில் சக்கரம் உள்ளது . வக்ர சனியின் வாகனம் , காக்காய் இன்னொரு பக்கத்தில் உள்ளது . இந்த கோயிலின் கோபுரம் கூட கொஞ்சம் வக்கரமாக உள்ளது .

இடத்தின் அமைப்பு

இந்த ஆலயம் திருவக்கரையில் , வானூர் வட்டத்தில் , விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது . புதுச்சேரி - விழுப்புரம் ஆரம்பிக்கும் இடத்தில் இரண்டு பாதைகள் உள்ளன , அதில் ஒன்று விழுப்புரத்திற்கு பாதை . அங்கிருந்து யாரை வேணுமென்றாலும் கோயிலுக்கு வழி கேக்கலாம் .

No comments: